சான்றுகள் - Testimonials

பாசமுடன் ஆசிரியருக்கு..
தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் வாழ்த்துப் பூக்கள்
அன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். பாசமலர் மே இதழ் 2012 பெற்றுக்கொண்டேன். ஆசிரியர் குழுவின் தலையங்க உரை, குறித்து வைத்துக்கொள்ளத் தக்க ஒன்று. மே 21பல்வகைமை நாள். மக்கள் சமூகங்களின், பண்பாட்டின் வகைத் திரிபு வளத்தின் மதிப்பீட்டைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கும், பல்வேறு பண்பாட்டினர்கள் ஒத்திசைவுடன் வாழ்வதற்குமான வழித்தடமொன்றை அமைத்து கொடுக்கின்றது. இரவில் மட்டும் விளக்கை ஏற்றுவோம். பயன்பாடு மிக்க மருத்துவக் குறிப்புகள் சிறப்பான சேர்க்கை.

‘காலத்தைப் பின்பற்று’ – கவிஞர் கா.ப.கலையரசன்  அவர்களுடைய கட்டுரை. இவர் தனது  ஆசிரியர் பணியின் பொருள் பொருந்திய மெய் குறிப்புகளை கோர்த்துக் கொடுத்திருக்கிறார்.  கவிஞர்  கே.பி. பத்மநாபன் அவர்கள் பல இதழ்களில் கவிதை படைத்துவரும் மிகச் சிறந்த கவிஞர். ‘ஊரும் பேரும்’ என்ற இவரது கவிதை பண்ருட்டி பலாப்பழமாகச் சுவைக்கிறது. சரியான வடிவத்தில் எழுத்துகள், சோர்வை அகற்றும் சின்னப்படங்கள், செறிவான குறிப்புகள் இவற்றுள் சீர்மிகு சிற்றிதழாகப் பாசமலர் மலர்ந்து மணக்கிறது.
தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் பாராட்டியும் வாழ்த்தியும் பாசமலரை வரவேற்கிறது.

 

பூ.அ. இரவீந்திரன் தலைவர், தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்

குடும்பத்தின் ஒவ்வொரு மனிதனும் ஒரு மலரே! அம்மலர்களை பாசம் என்னும் நாரால் பிணைத்து பாசமலராக்கி உள்ளீர். பாசமலர் பார்சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

 

வேலம்மாள், சென்ட் மேரீச் காலேஜ், தூத்துக்குடி.


பாசமலர் கண்டேன்! பரவசம் கொண்டேன்! பக்கத்துக்குப் பக்கம் பயன்தரும் படைப்புகள்! சிந்திக்கவும் சீர்திருத்தவும் சிறப்பான கருத்துக்கள்! பாசமலர் வளரட்டும். பாரில் மணம் கமழட்டும். பாசமலர் தந்த வல்லொர்க்கும் என் வாழ்த்து!
 

சிவன்மலைக் கவிஞர் ஆ.க.இராஜாமணி

பாசமலர் சிற்றிதழ் கண்டோம்

பைந்தமிழ் ஒளிமலர் விரிந்தது.

வாசமுள்ள வண்ணமிகு செய்திகள்

வலம்வர உள்ளம் குளிர்ந்தது.

வாழ்த்துகிறோம் வாழிய பல்லாண்டு!

முனைவர் அரிமா சி. சுப்பிரமணியம் செம்மொழித் தமிழ் வணக்கம்

பாசமலர் கண்டேன் பரவசம் கொண்டேன்!

நேசமலராய் நெஞ்சை அள்ளக் கண்டேன்!

சிந்தனைத் தேந்துளி நிறையக் கண்டேன்!

தீங்கின்றி வாழும் வழியைக் கண்டேன்!

 

கவிச்சுடர் ஏந்தி மாதந்தோறும் –

மலர்கின்ற மலரே! பாசமலரே!

வாசிப்போரின் சுவாசிப்போரின்

வாழ்வை வளமாக்கும் மலரே! வாழி!

 

கனவுகள் கண்ணில் ஓரயிரம்

நனவாக்க முயற்சி பல்லாயிரம்!

விடியலைத் தேடும் விழிகளுக்கு

விருந்தாய் மலர்ந்தாய் பாசமலரே!

 

வெற்றியின் விலாசம் தருகின்றாய்!

விரைந்து முயன்றிட அழைக்கின்றாய்

தோல்வியின் முதுகேறச் செய்கின்றாய்

முயற்சிதான் வாழ்வெனச் சொல்கின்றாய்!

 

திங்கள் தோறும் காத்திருப்பே-

ஞாயிறாய் ஒளிதர மலர்வாயே!

செவ்வாய் திறந்து படிப்பதற்கு

வெள்ளியின் இதழே வருக வருக!

சிந்தனை கவிஞர் கவிதாசன் பாசமலரே! வாழி!

பாசமலர் சிற்றிதழ் கண்டோம்

பைந்தமிழ் ஒளிமலர் விரிந்தது.

வாசமுள்ள வண்ணமிகு செய்திகள்

வலம்வர உள்ளம் குளிர்ந்தது.

வாழ்த்துகிறோம் வாழிய பல்லாண்டு!

 

பாசமலருக்கு பாராட்டு

குடும்ப உறவுகளை விளக்குபவளாய்!

குடும்பத்தில் இடம் பிடித்தாய்!

பல செய்திகளை அளிப்பவளாய்

அறிவுக்கு வித்திட்டாய்!

இனிமையின் பிறப்பிடமானவளாய்! – நீ என்

இதயத்தில் நுழைந்திட்டாய்!

மணம் வீசும் மலரானவளாய் - நீ என்

மனதினை பறித்துக் கொண்டாய்.

மாதம் ஒரு முறை பூப்பவளா? – நீ

வரும் பாதை பார்த்து காத்திருந்தேன்

வாடிய முகத்துடன்.

வாடா மலராய் வந்தாயே நீ வாழ்க

மணம் பரப்பும் மலராய் பல்லாண்டு!

உன் இதழ்களாகிய அனைத்து படைப்புகளும்

பெறுக வளர்ச்சி!

பாசமலர்

பார்வைக்கு விருந்தாய்!

சக்தி கொண்டு

மலர்ந்திடும் மலரே.

கலவையின் சுவையே!

கர்வமில்லா இதழே!!

பாவலர் போற்றிடவே!

சரித்திரம் படைத்திடவே!

மண்ணுலகில் நிலைத்திடுமே!

பலகை ஓவியமாய்!

பார்வையை கவர்ந்திடுமே!

“பாசமலர் என்றென்றும்...!!

எஸ்.பிரவின் அசோக்குமார் பாசமலர்

குடும்ப உறவுகளை விளக்குபவளாய்!

குடும்பத்தில் இடம் பிடித்தாய்!

பல செய்திகளை அளிப்பவளாய்

அறிவுக்கு வித்திட்டாய்!

இனிமையின் பிறப்பிடமானவளாய்! – நீ என்

இதயத்தில் நுழைந்திட்டாய்!

மணம் வீசும் மலரானவளாய் - நீ என்

மனதினை பறித்துக் கொண்டாய்.

மாதம் ஒரு முறை பூப்பவளா? – நீ

வரும் பாதை பார்த்து காத்திருந்தேன்

வாடிய முகத்துடன்.

வாடா மலராய் வந்தாயே நீ வாழ்க

மணம் பரப்பும் மலராய் பல்லாண்டு!

உன் இதழ்களாகிய அனைத்து படைப்புகளும்

பெறுக வளர்ச்சி!

பாசமலருக்கு பாராட்டு

பார்வைக்கு விருந்தாய்!

சக்தி கொண்டு

மலர்ந்திடும் மலரே.

கலவையின் சுவையே!

கர்வமில்லா இதழே!!

பாவலர் போற்றிடவே!

சரித்திரம் படைத்திடவே!

மண்ணுலகில் நிலைத்திடுமே!

பலகை ஓவியமாய்!

பார்வையை கவர்ந்திடுமே!

“பாசமலர் என்றென்றும்...!!

பாசமலர்

வையமே போற்றும் வண்ணம்

வளரட்டும் வண்ண மலர்

வாழ்விலே இன்பம் காணும்

வசந்தத்தின் இளமை மலர்

தேனிலே சுவையை காணும்

தேமொழி இனிமை மலர்

திகட்டாத கனியை போன்று

தித்திக்கும் செந்தேன் மலர்

இளைஞர்கள் கரத்தில் தவழும்

ஈடில்லா உவகை மலர்

இதயங்கள் வாழ்த்தும் நல்ல

இன்பமே பாசமலர்

வரலாறு படைக்க வல்ல

வாய்மொழி தந்த மலர்

வானமே பொழியும் இன்ப

வண்ணமே பாச மலர்.

எஸ்.பிரவின் அசோக்குமார், தோவாளை, குமரி மாவட்டம். பாசமலர்

பாசமலர் இதழை நேசமுடன்

                முகர்ந்தேன்...

வாசமலர்-வண்ணமலர்

                ஆசைமலரது

வீசுந் தென்றலொடு-மூசு

                வண்ட்றைப்

பொய்கையொடு பொலிவொடு

தூய்மையொடு துவங்குக

ஆய் விதழாக ஓய்வின்றி

                உழைத்துயர்க

‘பாசமலர்’ இதழின் வாசம்

                பரந்து விரிந்து

மணக்க, மண்பழில் இணக்கமாய்

                இருந்திடுமே...

கணக்கள் சோதடன்வன் வணக்கம்

வாழ்த்து கின்றேன் வாழ்க நல்கி வளர்கவே

வாழ்க வளநலமுடன்... வளநலம்

                பெறுகவே...

 

கவிஞர் பொன்னாடு, வடவள்ளி, கோவை வாழ்த்து வளம்

வீசட்டும் உன் வாசம் 8திக்கும்

                - பாசமலரே!

மலரட்டும் உன் பூக்கள் ஒவ்வொரு ஊரிலும்

           பூந்தோட்டங்களாய்- பாசமலரே!

சுவாசிக்கும் ஒவ்வொருவரின் உயிர் மூச்சு

                - பாசமலரே!

வாசிக்கும் ஒவ்வொருவரின் தேசியகீதம்

                - பாசமலரே!

காத்திருப்போம் ஒவ்வொரு மாதமும் உன்

           வரவிற்காக- பாசமலரே!

வரும் சந்ததிக்கு பணம்தான் முக்கியமென

நினைத்து ஓடும் தொடர் ஓட்டப்பந்தயத்தை

தவிர்த்து குடும்பங்களையும், சமூகத்தையும்

ஒருங்கிணைத்து ஒற்றுமைக்கு புத்துயிரூட்டும்

                - பாசமலரே!

நல்ல பண்புகளையும், பாசத்தையும் விட்டுச்

செல்வோமாக என்று அறிவுரை வழங்கிய

- பாசமலரே!

வாழ்க பல்லாண்டு!

வளர்க உன் புகழ்

 

நா. மஞ்சு. பாசமலர்

குடும்பத்தின் ஒவ்வொரு மனிதனும் ஒரு மலரே! அம்மலர்களை பாசம் என்னும் நாரால் பிணைத்து பாசமலராக்கி உள்ளீர். பாசமலர் பார்சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

வேலம்மாள் சென்ட் மேரீச் காலேஜ், தூத்துக்குடி.

பாசமலர் கண்டேன்! பரவசம் கொண்டேன்! பக்கத்துக்குப் பக்கம் பயன்தரும் படைப்புகள்! சிந்திக்கவும் சீர்திருத்தவும் சிறப்பான கருத்துக்கள்! பாசமலர் வளரட்டும். பாரில் மணம் கமழட்டும். பாசமலர் தந்த வல்லொர்க்கும் என் வாழ்த்து!

கவிஞர் ஆ.க.இராஜாமணி சிவன்மலை

“பாசமலர்” இதழ் சிறப்பாக உள்ளது. மாணவர்களுக்கு சிறந்த அறிவுறையை கொடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

தலைமை ஆசிரியர் சேக்கிரட் ஹார்ட் டிரெயினிங் ஸ்கூள், கடலூர்.

இதழ் தயாரிப்பில் உங்களின் செம்மையான உழைப்பு, சமுதாய நலன் மிக்க படைப்புகள் தேர்வு, எளிமையும் எழிலும் கொண்ட பக்கவார்ப்பு என பாராட்டுகளை அள்ளிக்கொள்கிறது பாசமலர்.

 

                              

                  

முனைவர் சூர்யகாந்தன் அரசு கலைக்கல்லூரி, கோவை.

இதழின் ஒவ்வொரு பக்கமும் படிப்பதற்கு அருமையாகவும், நம் வாழ்வின் நடை முறைகளை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது. சமாளித்தது எப்படி, ஐ.சி.ஜி கதைகள் போன்றவை மிகவும் சிறப்பாக உள்ளன.

                                 

                         

க.கோமதி கிங்ஸ் காலனி, வீரகேரளம், கோவை 7.

மொட்டுகள் அவிழ்கையிலே மணம் வீசும் என்பது போல் தங்களது பாசமலர் இதழ் ஒரு மனோதத்துவ இதழ் போல் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையில்லை. “பாசமலர்” எல்லோரும் படித்து பயன் பெற வேண்டிய ஒரு மாத இதழாக அமைந்து வருகிறது. தங்களது சேவை தொடர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்!

கே.சேதுராமன் திருநெல்வேலி.

பாசமலர் அழகாக இருக்கிறது, வண்ணத்திலும் எழுத்திலும். ஆர்வத்தோடு எதிர்பார்த்து, வந்தவுடன் வாசிபேன்.          

முனைவர் சூ.பாக்கியராசு சென்னை.

பாசமலர் இதழ் மாதந்தோறும் புதுபொலிவுடன் மெருகேறி வருகின்றது என்றால் அது மிகையல்ல. சிறுவர்களுக்கான தன்னம்பிக்கை கட்டுரையும் கற்பித்தல் ஒரு அனுபவம் பகுதியும் பாதுக்காக்கப்பட வேண்டிய பொது அறிவு பெட்டகமாக திகழ்கின்றன.

சேதுராமன்.கே திருக்குங்குடி

உங்கள் இதழ் முதன் முதலில் ஜனவரி மாதம் (2011) என் கையில் கிடைத்தது. இப்படி ஒரு அருமையான இதழை படிப்பதில் பெருமைபடுகிறேன். எங்கள் பள்ளியில் இந்த இதழ் தவறாமல் வருகிறது. அதை வாங்கி நான் படித்து வருகிறேன். உங்கள் இதழை படித்ததிலிருந்து எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. கற்பித்தல் அனுபவங்கள் தலைப்பில் வெளிவந்த செய்தி மிக அருமை. மற்றத் தகவல்களும்  மிக அருமை. என் ஆசிரியப் பணியின் மூலம் இந்த சமூகத்தை முன்னேற்ற முடியும் என்ற தன்னம்பிக்கை கொடுத்த உங்கள் இதழுக்கு என் மனமொத்த நன்றிகள்.

                      

ஜெ. மரியா ஆர், அன்னை மேரி நர்சரி அன்ட் பிரைமரி ஸ்கூல், ஈரோடு. உங்கள் இதழ் ரசிகை

நான் கொலை வழக்கில் கைதாகி, கடந்த ஐந்து வருடகாலமாக சிறையில் இருந்து வருகிறேன். சிறையில் இங்கு ஒரு நண்பரிடமிருந்து தங்களுடைய ‘பாசமலர்’ என்ற மாத இதழை வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையகவும், பயனுள்ள பல நல்ல தகவல்களை கொண்டதாகவும், அமைந்துள்ளது. அன்று திரையுலகத்திற்கு ஒரு பாசமலர் அமைந்தது போல் இன்று எழுத்துலகத்திற்கு ஒரு பாசமலர் அமைந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி.                                

                                  

R. தாமோதரன் எண். 1051, புழல் மத்தியசிறை 1,சென்னை.66

மரியாதையும் மதிப்புமுடைய ஆசானே, வணக்கம். தங்களின் இதழ் வழிவாசல் வந்தது. புரட்சிப் பூவையாய் நடைபோடும் தங்களின் ஊக்கம் எங்களின் வெற்றி! பாசமலரே நீ பாங்கான நேசமலர்!                             

கவிநிலா அருணா

அன்புடையீர், பாசமலர் அருமையாக, அழகாக, அறிவுக் களஞ்சியமாக அறிய வேண்டிய தகவல்களைத் தருகின்ற மதுர இதழ் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்.

தி.ரங்கசாமி.