Paasamalar

Paasamalar title

எங்களை பற்றி - About Us

குடும்பங்களைப் பாதுகாப்போம் சமூகத்தைக் காப்பாற்றுவோம்

 

மனித சமுதாயத்தின் அடித்தளம் குடும்பம். எனவே ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது குடும்ப நலமே. குடும்ப உறவுகளில் விரிசல்கள் தோன்றுமாயின் அது சமூக நலத்தையே சீர்குலைத்து விடும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலத்தில் குடும்பங்களில் குழப்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இன்றைய உலகம் நவீனமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் நுகர்பண்பாடுகளில் மூழ்கியுள்ளது. இத்தீமைகளனைத்தையும்,  குடும்ப உறவுகளையும், அதன் மதிப்பீடுகளையும் சீர்குலைக்கும் சமுக விரோத போக்குகளை மற்றும் செயல்பாடுகளை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கட்டாய நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மட்டுமல்ல,  குடும்ப உறவுகளை வளரச்செய்யவும் குடும்ப்பாசப்பிணைப்பை வலுப்படுத்தவும் பெருமுயற்சி செய்வது நமது கடமை. இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கானப் பணியின் முதற்படியே “பாசமலர்” என்னும் தமிழ் குடும்ப மாத இதழ். குடும்பங்களுக்கு இன்றியமையாத மதிப்பீடுகள் பலவகை இலக்கிய உத்திகளில் வடிவமைத்து அனைத்து சமயத்தினரும் வாசிக்கும் முறையில் அறிமுகம் செய்யப்படுகின்றன. மத இன வேறுபாடுகளைக் கடந்து நின்று, எல்லோரும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய குடும்ப நலமதீப்பீடுகளை சிறந்த எளிய முறையில் அறிமுகப்படுத்தி மேன்மையடைய செய்து சமுதாயத்தில் ஒரு பண்பட்ட, ஒற்றுமை மிகுந்த குடும்பங்களை உருவாக்குவதே இம்மாத இதழின் தலையான பணியாகும்.

பாசமலர் இதழானது உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு ோவையில் நடைபெற்ற இனிய வேளையில், அதாவது 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில், விடியலைக் கண்டது. நல்லுள்ளம் கொண்ட தமிழ்பெருமக்கள் இந்த இதழை உளங்கனிந்த பாசத்துடன் செல்லக்குழந்தையெனப் பேணிவளர்த்துகின்றனர். பல நல்ல உள்ளங்கள் பாசமலருக்கு சீரிய படைப்புகளைத் தந்து ஊக்குவிப்பது இந்த மலர் உண்மையாகவே குடும்ப நலப்பணியில் சிறந்த தொண்டாற்றி வருகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.

பாசமலர் முதலாம் ஆண்டு, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, குடும்ப உறவுகளை மையக்கருத்தாகக் கொண்டு கதை, கவிதை ஆகியவற்றின் போட்டிகள் நடத்த பெற்று பரிசுகள் வழங்கி நிறைவுற்றது. 100க்கும் மேற்பட்ட கதைகளையும் கவிதைகளையும் தமிழ் மாநிலம் முழுவதிலுமிருந்து பெறப்பட்டு, மதீப்பீடு செய்யப்பட்டு,  பரிசுகள் வழங்கியமை ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. அக்கதைகளும் கவிதைகளும் பாசமலர் இதழில் பிரசுரிக்கப் பெற்று எழுத்தாளர்கள் கௌரவிக்கப் படுகின்றனர்.

பாசமலரின் முதல் இதழிலிருந்து சிறார்களுக்கான சன்மார்க்க கதைகளை வழங்கி ஒவ்வொரு இதழையும் மனம் கமழ சிறப்பித்து வந்தவர் திரு ஐ. சி. கோவிந்தசாமி அவர்கள். இந்த இதழ் வெளியீடின் இரண்டாம் ஆண்டு பூர்த்தியடையும் தருவாயில், இந்தக் கதைகள் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு “குயிலைத் தேடி” என்ற பெயரில் ஒரு புத்தகத்தை ஐய்யா அவர்களால் வெளியிடப்பட்டது என்பது பாசமலர் இதழுக்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது.

பாசமலர் உங்கள் இதழ். இதழின் உயர்வுக்கு உங்கள் ஆர்வமும் அக்கறையும் தான் முதன்மையான மூலதனம். உங்கள் ஒத்துழைப்பால் நம்மிதழ் வெற்றியை அடையுமென்பது உறுதி.

உங்கள் அருமதிப்பார்ந்த கருத்துகளை வரவேற்கிறோம்.

ஆசிரியர் குழு

எங்கள் சகோதர அமைப்புகள்

பிரேஷிதா சேவா சங்கம்

1981 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு மக்கள் பணியாற்றி வருகிறது. ஜாதி, சமய, மத இன, மொழி வேறுபாடின்றி, பணியாற்றும் இந்நிறுவனம் தனி மனித வளர்ச்சிக்காக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

Address:
Little Flower Mission Centre
Bharathiar University P. O.
Coimbatore – 641 046
Tamilnadu.
 

பிரேஷிதா சேவா சங்கம்

பிரேஷிதா சேவா சங்கம், பொள்ளாச்சி

பிரேஷிதா சேவாசங்கம், பொள்ளாச்சி திட்ட அலுவலகம் சார்பாக, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் ஊரக  வளர்ச்சிக்காகவும், குறிப்பாக பெண்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக 1984 ஆம் வருடம் முதல் பணியாற்றிவருகிறது.

பிரேஷிதா சேவா சங்கம், பொள்ளாச்சி

ஆஸ்ரய சேவன சங்கம்

2008 ஆம் ஆண்டு முதல் கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மனம் மற்றும் உடல் ஊனமுற்ற ஆதரவற்றோர்களுக்காக ஒரு காப்பகம் அமைக்கப்பெற்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரே சமயத்தில் 50க்கும் மேற்ப்பட்டோர் தங்கி பலனடைந்து வருகிறார்கள்.

ஆஸ்ரய சேவன சங்கம்

SAMAGRA

குழந்தைகளின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக இந்நிறுவனம் கேரளமாநிலம் பாலக்காடில் 2005 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது.

SAMAGRA

திருத்துவ ஆசிரமம்

1996 லிருந்து செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் மனம் மற்றும் உடல் ஊனமுற்ற ஆதரவற்றோர்களுக்காக கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு காப்பகத்தை அமைத்து செயல்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் 120க்கும் மேற்ப்பட்டோர் இங்கு தங்கி பயனடைந்து வருகின்றனர்.

திருத்துவ ஆசிரமம்

பிரேஷிதா சேவா சங்கம், கோயம்புத்தூர்

2008 ஆம் ஆண்டு முதல் சமுதாயத்தில் நலிவுற்றோர்களுக்காக, குறிப்பாக, ஆதரவற்றோர் HIV/AIDS ஆல் பாதிக்கப்பட்டோர், இலங்கை அகதிகள் மற்றும் சேரிகளில் வாழும் மக்களுக்காக தொண்டாற்றி வருகிறது.

பிரேஷிதா சேவா சங்கம், கோயம்புத்தூர்

பிரேஷிதா சேவா சங்கம், பாலக்காடு

மாவட்ட சைல்டுலைன் சார்பாக குழந்தைகளின் உரிமைகளுக்காகவும் ஏனைய நலங்களுக்காகவும் 2005 ஆம் ஆண்டிலிருந்து அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

 

பிரேஷிதா சேவா சங்கம், பாலக்காடு

அட்டபாடி சோஷியல் சர்வீஸ் ஆர்கனைசேசன்(ASSO)

ஆனைகட்டியை சார்ந்திருக்கும் அட்டப்பாடி மலைவாழ் மக்களின் நலனுக்காகவும் இயற்கை பாதுக்காப்பிற்காகவும் 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்நிறுவனம் தொண்டாற்றி வருகிறது

அட்டபாடி சோஷியல் சர்வீஸ் ஆர்கனைசேசன்(ASSO)

பிரேஷிதா அறக்கட்டளை

பொள்ளாச்சி தாலுக்கை மையமாகக் கொண்டு அங்குள்ள ஊரக மக்களின் மருத்துவ நலனை மேம்படுத்த 1987 ஆண்டு முதல் மருத்துவ பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிரேஷிதா அறக்கட்டளை

உதயம் அறக்கட்டளை

ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பள்ளி மற்றும் காப்பகத்தை நடத்தி வருகிறது.

உதயம் அறக்கட்டளை

சுஹ்றுத்பவன் அறக்கட்டளை

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் ஆதரவற்று தெருவில் சுற்றித்திரியும் குழந்தைகளை கண்டெடுத்து அவர்களின் மேம்பாட்டிற்காகவும் கல்வி, மற்றும் இதர நலன்களை காக்கவும், பாலக்காடு மாவட்டத்தில் ஒரு காப்பகத்தை அமைத்து அடைக்கலம் அளித்து வருகிறது.

சுஹ்றுத்பவன் அறக்கட்டளை

   SANJoSS

அட்டப்பாடியில் மலைவாழ் மக்களின் குழந்தைகள்  மற்றும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளை பாதுகாத்து அவர்களின் வளர்ச்சிக்காக வெவ்வேறு பணிகளைச் செய்யும் காப்பகமாக 1994 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது.

 

    SANJoSS

கருணை இல்லம்

கோவை, கவுண்டபாளையத்தில் அமையப் பெற்றுள்ள இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, ஆதரவற்றோர், குடி நோயாளிகள் மற்றும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றி வருகிறது.

கருணை இல்லம்